தொட்டியம் அருகே பகவதி அம்மன் கோவில் திருவிழா

தொட்டியம் அருகே பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

Update: 2022-12-26 19:54 GMT

தொட்டியம் அருகே உள்ள கொசவம்பட்டி கிராமத்தில் பகவதியம்மன் கோவில் உள்ளது. . இக்கோவிலில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு மார்கழி மாத திருவிழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. முக்கிய திருவிழாவான கரகம்பாலித்தல் நந்தவனக்கிணற்றில் நேற்று மேளதாளத்துடன் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சரங்குத்தி, கரும்புள்ளி, செம்புலி குத்திக்கொண்டு ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர். பகவதிஅம்மன், மாரியம்மன், முருகன், ரங்கநாதன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இரவு நடந்த மாரியம்மன் கும்பிடும் நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் விரதம் இருந்து தாங்கள் வீட்டில் தயார் செய்யப்பட்ட நெய்வேத்தியங்களை பகவதி அம்மன் முன்பு படையலிட்டு வழிபாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்