பகவதி அம்மன்-கருப்பண்ண சாமி கோவில் திருவிழா

பகவதி அம்மன்-கருப்பண்ண சாமி கோவில் திருவிழா நடந்தது.

Update: 2023-01-09 18:30 GMT

குளித்தலை சபாபதி நாடார் மற்றும் பகவதி அம்மன் கோவில் தெருவில் பகவதி அம்மன், கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி கடந்த 4-ந்தேதி முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. இத்திருவிழாவின் முதல் நாளான கடந்த 6-ந்தேதி இரவு கடம்பந்துறை காவிரி நதிக்கரையில் இருந்து அம்மன் கரக புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கடம்பவனேசுவரர் மற்றும் பகவதி அம்மன் கோவில்களை சுற்றியுள்ள வீதிகளில் கருப்பண்ணசாமி, அம்மன் கரக வீதி உலா நடைபெற்றது. 7- ந் தேதி கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பகவதி அம்மன் கோவிலில் இருந்து சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட அம்மன் கரகம் எடுக்கப்பட்டது. சாமி கரகம் மற்றும் கருப்பண்ணசாமியின் சூலம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பூசாரிகள் முக்கிய வீதிகள் வழியாக சென்று அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து கரம் புறப்பட்டு முக்கிய தெருக்கள் வழியாக சென்று நேற்று அதிகாலை பகவதி அம்மன் கோவிலை சென்றடைந்தது. வீதிஉலா சென்ற பகுதிகளில் பக்தர்கள் சாமிக்கு மாவிளக்கு போட்டும், தேங்காய் உடைத்தும் சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். விடையாற்றியுடன் திருவிழாவின் இன்று முடிவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்