பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா

பட்டிவீரன்பட்டியில், பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2023-05-04 14:08 GMT

பட்டிவீரன்பட்டியில், சுமார் 700 ஆண்டுகள் பழமையான பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், சித்திரை மாத திருவிழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் கருப்பணசாமி பூஜை, பூசாரி அழைப்பு மற்றும் புலி ஆட்டம், ஒயிலாட்டம் வானவேடிக்கை, மேளதாளம் முழங்க அம்மன் கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி, சுவாமி முளைப்பாரி நிகழ்ச்சி நடந்தது.

இதைத்தொடர்ந்து மாவிளக்கு பூஜை, பால்குடம் எடுத்தல் மற்றும் அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று அதிகாலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மட்டுமே பங்கேற்ற 1,008 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. மேலும் ஏராளமான பக்தர்கள் மேளதாளம் முழங்க முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஊஞ்சல் உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் பத்ரகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மன் பூஞ்சோலைக்கு சென்றடைதலுடன் விழா நிறைவடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்