கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பத்ர தீப விழா

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பத்ர தீப விழா நடந்தது.

Update: 2023-01-21 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி பூஜை நடந்தது. காலை 10.30 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து 6 மணிக்கு உற்சவ மூர்த்தி சன்னதியில் வைக்கப்பட்டிருந்த பிரதான விளக்கில் தீபம் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரத்து 8 தீபங்களை பெண் பக்தர்கள் ஏற்றி வழிபாடு செய்தனர். பூவனநாதர், விநாயகர், சிவன், கண்ணப்ப நாயனார் உள்ளிட்டோர் உருவங்கள் மற்றும் மயில் உள்ளிட்ட சுவாமி வாகனங்களின் படங்களும் வரைந்து அதனை சுற்றி விளக்குகளை ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். இரவு 8 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடந்தது.

இதேபோல் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சகரேஸ்வரி அம்மன் புற்றுக் கோவிலில் நேற்று தை அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்