திருச்செந்தூர்- நெல்லை இடையேநெடுஞ்சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
திருச்செந்தூர் - நெல்லை நெடுஞ்சாலையில், விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் - நெல்லை நெடுஞ்சாலையில், விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
திருச்செந்தூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் காமராசு நாடார் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர்கள் தசரதபாண்டியன், யாபேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கண்ணன் வரவேற்று பேசினார். மாநில இணை செயலாளர் ஜெபஸ் திலகராஜ் பேசினார்.
போலீஸ் கட்டுப்பாட்டு அறை
கூட்டத்தில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வியாபாரிகள் தற்போது வணிகம் செய்து வரும் இடத்திலேயே வருகிற மாசித் திருவிழா முடியும் வரை வணிகம் செய்ய அனுமதிக்க வேண்டும். திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும்.
திருச்செந்தூர் - நெல்லை நெடுஞ்சாலையில், விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். திருச்செந்தூரில் சாலை வசதியை மேம்படுத்த வேண்டும். தினசரி சந்தையில் கட்டிட பணியை விரைந்து முடித்து பழைய வியாபாரிகளுக்கே கடைகள் வழங்க டோக்கன் வழங்க வேண்டும். மேலும் சொத்துவரி, தொழில் வரியை அதிக அளவு உயர்த்தியுள்ள திருச்செந்தூர் நகராட்சியை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாற்றுத்திறனாளி பெண் முருகம்மாளுக்கு காது மிஷின் வாங்க ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில், சாயர்புரம் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் நாகராஜன், ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் தசரதபாண்டியன், மணிவண்ணன், சுந்தர், அருணாசலம், குரும்பூர் நாடார் வியாபாரிகள் சங்கத் தலைவர் பாஸ்கர், பழைய காயல் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெய்சங்கர், ஆறுமுகநேரி ஐக்கிய வியாபாரிகள் சங்கத் தலைவர் தாமோதரன், காயல்பட்டினம் வியாபாரிகள் சங்கத் தலைவர் குருசாமி, காயல்பட்டினம் நாடார் வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகேசன், அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் கண்ணன், திருச்செந்தூர் யாதவ வியாபாரிகள் சங்க தலைவர் பெரியசாமி, சைவ வேளாளர் வியாபாரிகள் சங்க தலைவர் மணிகண்டன், உடன்குடி அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் அம்புரோஸ், நாசரேத் வணிகர் சங்கத் தலைவர் ஜெபஸ் திலகராஜ், நுகர்பொருள் விற்பனையாளர் சங்க தலைவர் நம்பி, திருச்செந்தூர் நாடார் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், பொருளாளர் செல்வின் நாடார், துணை செயலாளர் பார்த்திபன், சத்யசீலன், துணைத் தலைவர் பால்வண்ணன், முருகன், பாலமுருகன், லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட பொருளாளர் அருணாசலம் நன்றி கூறினார்.