ஆழ்வார்திருநகரி-நாசரேத் இடையே ரூ.1.86 கோடியில் தார்சலை புதுப்பிக்கும் பணி
ஆழ்வார்திருநகரி-நாசரேத் இடையே ரூ.1.86 கோடியில் தார்சலை புதுப்பிக்கும் பணி தொடங்கியது
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரியில் இருந்து நாசரேத் இடையே சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள சாலையை ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி தொடக்க விழா நடந்தது. விழாவில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கிவைத்தார். விழாவில் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவி சாரதா பொன் இசக்கி, துணைத்தலைவர் சுந்தர்ராஜ், தி.மு.க. நகர செயலாளர் கோபிநாத், ஆவ்வார்திருநகரி காங்கிரஸ் வட்டார தலைவர் கோதண்டராமன், முன்னாள் தி.மு.க. நகர செயலாளர் முத்துராமலிங்கம், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட செயற்பொறியாளர் விஜய் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று பன்னம்பாறை முதல் சாத்தான்குளம் பஜார் மற்றும் மேலசாத்தான்குளம் முதல் அரசு மகளிர் கலைக் கல்லூரி வரை ரூ.2.54 கோடியில் சாலை மேம்பாட்டு பணி தொடக்க விழா சாத்தான்குளம் நகரப்பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நடந்தது. நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் விக்ரம் சிங் தலைமை தாங்கினார். நகரப்பஞ்சாயத்து தலைவர் ரெஜினி ஸ்டெல்லா பாய், செயல் அலுவலர் உஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. ஒன்றிய செயலாளரும், நகரப்பஞ்சாயத்து கவுன்சிலருமான ஜோசப் வரவேற்றார். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கொடியசைத்து சாலை மேம்பாட்டு பணியை தொடங்கி வைத்தார். இதில் பஞ்சாயத்து தலைவர்கள் முதலூர் பொன் முருகேசன், பன்னம்பாறை அழகேசன், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க தலைவர் இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.