பெத்தனாச்சி அம்மன் கோவில் கொடை விழா

விளாத்திகுளம் அருகே பெத்தனாச்சி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது.

Update: 2023-02-25 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை கிராமத்தில் அமைந்துள்ள பெத்தனாச்சி அம்மன் பெரியாண்டவர் கோவிலில் மாசி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொடை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு குலதெய்வ வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள் பெத்தாட்சியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

குலதெய்வ வழிபாட்டின் சிறப்பு வழிபாடாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நள்ளிரவு 1.30 மணிக்கு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடன்களை செய்தனர். முன்னதாக பூக்குழி இறங்கும் அக்னியை சுற்றி உருண்டு கொடுத்தல் (அங்க பிரதட்சணம்) செய்து பெத்தநாச்சியம்மனை வழிபட்டனர். விழாவில் விளாத்திகுளம் பகுதி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியை கண்டுகளித்து அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்