திருச்சி முசிறி காவல்நிலையத்திற்கு சிறந்த காவல்நிலையத்திற்கான விருது..!
திருச்சி முசிறி காவல்நிலையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவல்நிலையத்திற்கான உள்துறை விருது வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி,
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவல்நிலையத்திற்கான விருது திருச்சி முசிறி காவல்நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், டிஜிபி அலுவலகத்தில் நேரில் சந்தித்து விருதினை காண்பித்த முசிறி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமை காவலர் மகாமுனி, காவலர் ஆனந்தராஜ் ஆகியோருக்கு வெகுமதி வழங்கி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டினார்.