அதிக மகசூல் செய்தவருக்கு சிறந்த விவசாயி விருது

தண்டராம்பட்டு வட்டாரத்தில் அதிக மகசூல் செய்தவருக்கு சிறந்த விவசாயிக்கான விருதை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.

Update: 2023-05-25 17:23 GMT

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டாரத்தில் உலக வங்கி நிதி உதவியுடன் நீர் மற்றும் நிலவள திட்டம், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தண்டராம்பட்டு வட்டாரத்தில் ஆழ்யாறு உபவடிநீர்ப்பகுதி தேர்வு செய்யப்பட்டு வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் இடுபொருட்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக விளைச்சல் எடுத்த விவசாயிக்கு நேற்று தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் பா.முருகேஷ் சிறந்த விவசாயிக்கான விருதை வழங்கினார். தென்முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன், அகரம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த குப்புசாமி ஆகிய இரண்டு விவசாயிகள் இந்த விருதை பெற்றனர்.

சிறப்பாக பணிபுரிந்த உதவி வேளாண்மை அலுவலர் கண்ணனுக்கும் சிறந்த அலுவலருக்கான விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தாசில்தார் அப்துல்ரகூப், வேளாண்மை உதவி இயக்குநர் ராம்பிரபு, வேளாண்மை அலுவலர் நிவேதா, துணை தாசில்தார்கள் செந்தில்குமார், மோகன்ராம், வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்