போதை சாக்லேட், கஞ்சா கடத்திவந்த பெங்களூரு வாலிபர் கைது

ஒடிசாவில் இருந்து ரெயிலில் போதை சாக்லேட் மற்றும் கஞ்சா கடத்தி வந்த பெங்களூரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-25 18:58 GMT

ரெயிலில் வந்த வாலிபர்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே ஒடிசா மாநிலத்தில் இருந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் ெரயில் வந்து கொண்டிருந்தபோது, ெரயிலில் டிக்கெட் பரிசோதகர் வருவதை அறிந்து இளைஞர் ஒருவர் ஆம்பூர் ெரயில் நிலையத்தில் இறங்கி அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்திற்கு சென்று நின்று கொண்டிருந்தார்.

இது குறித்து மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ், ஏட்டு ரமேஷ் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மேல்நடவடிக்கைக்காக வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கஞ்சா, போதை சாக்லேட் கடத்தல்

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் விரைந்து சென்று சந்தேகிக்கும் வகையில் பையுடன் நின்றிருந்த வாலிபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அதில் கஞ்சா மற்றும் போதை சாக்லேட்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அந்த வாலிபரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் பெங்களூரு பகுதியை சேர்ந்த அணில் குமார் என்பதும், ஒடிசா மாநிலத்தில் இருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் 350 கிராம் போதை சாக்லேட்டுகளை கடத்தி வந்து ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் சப்ளை செய்வதற்காக வந்தது தெரிய வந்தது.

அவரை போலீசார் கைது செய்து, அவர் கடத்தி வந்த கஞ்சா மற்றும் போதை சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்