வீடு கட்டும் பணிகளை பயனாளிகள்விரைந்து முடிக்க வேண்டும்
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டும் வீடு கட்டும் பணிகளை பயனாளிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
திருவெண்காடு:
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டும் வீடு கட்டும் பணிகளை பயனாளிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
ஆலோசனை கூட்டம்
சீர்காழி ஊராட்சி ஒன்றியம், பூம்புகார் தனியார் மண்டபத்தில் காவிரிப்பூம்பட்டினம், தென்னாம்பட்டினம், பெருந்தோட்டம், திருவெண்காடு மற்றும் கீழ சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாரத பிரதமர் வீடு கட்டும் பயனாளிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சிகள் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் வரவேற்றார்.
விரைந்து வீடுகளை கட்டி முடிக்க வேண்டும்
இதில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி கலந்து கொண்டு மேற்கண்ட ஊராட்சிகளில் இருந்து வருகை தந்த வீடு கட்டும் பயனாளிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது அவர் விரைந்து வீடுகளை கட்டி முடிக்க வேண்டுமென பயனாளிகளை கேட்டுக்கொண்டார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், சீர்காழி உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் சீதாலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சுகந்தி நடராஜன், நடராஜன், துரைராஜன், சரளா, மோகனா ஜெய்சங்கர், ஒன்றிய பொறியாளர்கள் தெய்வானை, கலையரசன், பணி மேற்பார்வையாளர்கள் பாபு, பாரதி, சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.