கடல் அழகை ரசிக்க சுற்றுலா பயணிகளுக்கு இருக்கை வசதி

ராமேசுவரத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் நகராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளில் அமர்ந்து கடல் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.

Update: 2022-09-04 17:52 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் நகராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளில் அமர்ந்து கடல் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள்

தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிக முக்கிய சுற்றுலாதலமாக ராமேசுவரம் விளங்கி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ராமேசுவரம் வருகின்றனர். இதுவரையிலும் சுற்றுலா பயணிகள் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் அமர்ந்து கடல் அழகை பார்த்து ரசிக்கும் வகையில் இருக்கைகள் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் ராமேசுவரம் நகராட்சி சார்பில் தலைவர் நாசர்கான், நகராட்சி ஆணையாளர் கண்ணன் பொறியாளர் அய்யனார் ஆகியோர் உத்தரவின் பேரில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக அக்னிதீர்த்த கடற்கரை பகுதியில் அமர்ந்து சுற்றுலா பயணிகள் கடல் மற்றும் கடற்கரை அழகை பார்த்து ரசிக்கும் விதமாக கற்களால் ஆன ஏராளமான இருக்கைகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளன.

புதிதாக அமைக்கப்பட்டு உள்ள இந்த இருக்கைகளில் அமர்ந்து அக்னி தீர்த்த கடல் மற்றும் கடற்கரை அழகை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

ஏற்பாடு

வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் உள்ளூரை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் குழந்தைகளுடன் இந்த இருக்கையில் அமர்ந்து காற்று வாங்கியபடி கடல் அழகை பார்த்து ரசித்து வருகின்றனர்.

புதிதாக இருக்கைகள் அமைத்து சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள நகரசபை தலைவர் நாசர்கானுக்கு உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்