பட்டா மாறுதல் முகாம்

ஆற்றங்கரை ஊராட்சியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2023-10-12 18:45 GMT

பனைக்குளம், 

மண்டபம் ஒன்றியம் ஆற்றங்கரை ஊராட்சியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் கோபு, குடிமை பொருள் வட்டாட்சியர் தமீம் ராஜா, துணை வட்டாட்சியர்கள் காளீஸ்வரன், சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெறப்பட்டன.

முன்னதாக ஆற்றங்கரை ஊராட்சி தலைவர் செ.முஹம்மது அலி ஜின்னா, துணை தலைவர் நூருல் அர்பான் ஆகியோர் வரவேற்றனர். இதில், ஆற்றங்கரை முஸ்லிம் ஜமாத் தலைவர் சவுகார், செயலாளர் நாகூர் கனி, வார்டு உறுப்பினர் நாகராஜ், இந்து சமூக நிர்வாகி தேவேந்திரன், பாஸ்கரன், முஸ்லிம் ஜமாத் பொருளாளர் ரியாஸ், சேர்வைகாரன் ஊரணி ராஜா பிரியா, பூமிநாதன், கனகு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்