கராத்தே பயிற்சி முடித்த மாணவ- மாணவிகளுக்கு பெல்ட், சான்றிதழ்

கராத்தே பயிற்சி முடித்த மாணவ- மாணவிகளுக்கு பெல்ட், சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2022-11-27 17:30 GMT

காஞ்சி போதிதர்மர் சிடோ ரியு கராத்தே பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற 100 மாணவ- மாணவிகளுக்கு பெல்ட், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சோளிங்கர் தனியார் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் மாநில செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். பள்ளியின் மாநில பொருளாளர் மணி முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் பிச்சாண்டி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக சோளிங்கர் நகராட்சி துணைத் தலைவர் பழனி, பள்ளியின் மாநில தலைவர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி முடித்த 100 மாணவ, மாணவிகளுக்கு கருப்பு, பச்சை, மஞ்சள், நீலம், ஆரஞ்சு உள்ளிட்ட பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள். இந்தப் பள்ளியின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் ஜூனியர் பிரிவில் தங்கம் வென்ற மோகனப்பிரியா, சீனியர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பொழிலரசு, வெண்கல பதக்கம் வென்ற தாமரைச்செல்வன் ஆகியோரை பாராட்டி பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவில் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்