பாடலீஸ்வரர் கோவில் தேரில் மணிகள் திருட்டு

கடலூர் பாடலீஸ்வரர் கோவில் தேரில் மணிகள் திருட்டு போலீசார் விசாரணை

Update: 2023-05-19 18:45 GMT

கடலூர்

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் 2-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு கோவிலில் எல்லை கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிலையில் தேரோட்டத்திற்காக, அதனை சீரமைக்க கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி தேரடி வீதியில் கூடாரம் அமைத்து நிறுத்தப்பட்டிருந்த தேரை சீரமைக்க, கூடாரத்தை அகற்றினர். அப்போது தேரில் இருந்த 10-க்கும் மேற்பட்ட மணிகளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாடலீஸ்வரர் கோவில் தேரில் இருந்த மணிகள் திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்