காங்கயத்தில் கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த பீகார் வாலிபர் கைது
காங்கயத்தில் கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த பீகார் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 கிேலா கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
காங்கயம்
காங்கயத்தில் கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த பீகார் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 கிேலா கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பீகார் வாலிபர் கைது
இளைய தலைமுறையை தவறான பாதைக்கு இழுத்து செல்வது கஞ்சாவும், போதை தரும் மதுபானமும்தான். அதுவும் மாணவர்களை குறி வைத்து இவை விற்பனை செய்யப்படுகிறது. எனவே அவற்றை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். காங்கயம் அருகே தாராபுரம் சாலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காங்கயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற ஆசாமி போலீசாைர கண்டதும் ஓட்டப்பிடிக்க முயன்றார். உடனே போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 1 கிலோ கஞ்சா மற்றும் 9 கிலோ கஞ்சா சாக்லெட் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த விகாஷ்குமார் (வயது 26) என்பதும் தெரியவந்தது.இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 1 கிலோ கஞ்சா, 9 கிலோ கஞ்சா சாக்லெட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
நடவடிக்கை
இது போல் மாவட்டத்தில் ஆங்காங்ேக கஞ்சா சாக்லெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே போலீசார் தீவிர ரோந்து செய்து கஞ்சா சாக்லெட் விற்பனை செய்பவர்களை கண்டு பிடித்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.