அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

Update: 2022-10-14 17:06 GMT

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு ஓய்வு, விருப்ப ஓய்வில் சென்றவர்களின் பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும்.

1.9.2019-க்கு பிறகு ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 14-வது சம்பள ஒப்பந்தத்தில் சம்பள உயர்வை கணக்கீடு செய்து ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை உறுதி செய்ய வேண்டும். தி.மு.க. தேர்தல் வாக்குறுதிப்படி 2003-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு ஓய்வுபெற்றோர் நல அமைப்பு தலைவர் சுகுமாறன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் நாச்சிமுத்து முன்னிலை வகித்தார். இதில் ஏ.ஐ.டி.யு.சி. திண்டுக்கல் மண்டல தலைவர் பாஸ்கர், துணை பொதுச்செயலாளர் ஸ்ரீதரன், திண்டுக்கல் மண்டல செயலாளர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்