கலெக்டர் அலுவலகம் முன்புபா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க. சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-05-20 18:45 GMT

பா.ஜ.க. சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ராஜபாண்டியன், பா.ஜ.க. முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன், மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி, நகர தலைவர் மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது செங்கல்பட்டு,விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கள்ளச்சாராயத்தை ஒழிக்கத் தவறிய தமிழக அரசை கண்டித்தும், மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சர் மற்றும் முதல்-அமைச்சரை பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்