பேரளம் அருகே உள்ள செருவளூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் அருகே அரச மரத்தில் விஷ வண்டுகள் கூடுகட்டி இருந்தன. அந்த கூட்டினை அகற்றும்படி ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி பேரளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி தீயனைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ராமச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று விஷவண்டு கூட்டை தீ வைத்து அழித்தனர்.