தேனீக்கள் கொட்டி நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் 10 ேபர் காயம்

நாட்டறம்பள்ளி அருகே தேனீக்கள் கொட்டி நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் 10 ேபர் காயம் அடைந்தனர்.

Update: 2023-04-28 18:16 GMT

நாட்டறம்பள்ளி தாலுகா பச்சூர் பழையபேட்டை பொதிகை வட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது தென்னை மரத்தில் இருந்து தென்னமட்டை ஒன்று அருகில் இருந்த வேப்ப மரத்தின் மீது விழுந்தது. வேப்பமரத்தில் மலைத்ேதனீயின் கூடு கலைந்ததால், தேனீக்கள் கூட்டமாக பறந்து வந்து அருகில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொட்டியது.

அதில் பலத்த காயம் அடைந்த பழையபேட்டை பகுதியைச் சார்ந்த புண்ணியம்மாள் (வயது 60), சாலி (45), அருள்மொழி (45), வள்ளியம்மாள் (51) ஆகிய 4 ேபர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட 6 பேர் நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவா்களில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்