பாப்பிரெட்டிப்பட்டியில்தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்

Update: 2023-02-05 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் மகளிர் திட்டம், இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் தேனீ வளர்ப்பு குறித்த சிறப்பு பயிற்சி முகாமை நடத்தியது. இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு நிறுவன இயக்குனர் புவனேஸ்வரி குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார். கிராமப்புற இளைஞர்கள் வேலை வாய்ப்பு மற்றும் சுய தொழிலை உருவாக்கும் நோக்கில் இளைஞர்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும் என எடுத்து கூறபட்டது. இதில் வட்டார மேலாளர் அருண்குமார், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஆதவன், பயிற்றுனர் மரியதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் 35 இளைஞர்கள் பங்கேற்று பயன் அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு நிறுவனத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்