காதல் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை

மார்த்தாண்டம் அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-13 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளி

மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு பண்டாரவிளையை சேர்ந்தவர் ஜஸ்டின் ஜெபராஜ் (வயது 31), தொழிலாளி. இவருடைய மனைவி சரிதா (29). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன்காரணமாக சரிதா தனது 2 குழந்தைகளுடன் கடந்த சில மாதங்களாக கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மனைவி குழந்தைகளுடன் பிரிந்து சென்றதால் ஜஸ்டின் ஜெபராஜ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜஸ்டின் ஜெபராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜஸ்டின் ஜெபராஜின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரைணை நடத்தி வருகிறார்கள்.

காதல் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்