சிலருக்கு இடையே ஏற்படும் பிரச்சினையால் தனியாருக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கலாம்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சிலருக்கு இடையே ஏற்படும் பிரச்சினையால் தனியாருக்கு சொந்தமான சொத்துகளை சேதப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கலாம் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-06-12 20:37 GMT


சிலருக்கு இடையே ஏற்படும் பிரச்சினையால் தனியாருக்கு சொந்தமான சொத்துகளை சேதப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கலாம் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

முரண்பாடான கருத்து

தமிழகத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்படும் மோதலில் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் போது தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டத்தின் கீழ் தீர்வு காண்பது சம்பந்தமாக ஐகோர்ட்டு நீதிபதிகளிடையே முரண்பாடான கருத்துகள் எழுந்தன. இதனால் இந்த விவகாரத்தில் தெளிவான நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அதன்பேரில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது தொடர்பாக சில மாநிலங்கள் சட்டங்களை இயற்றி உள்ளன. அதன்படி இங்கு கடந்த 1992-ம் ஆண்டு பொது சொத்துகளை பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது.

பின்னர் 1994-ம் ஆண்டில் தனியார் சொத்துகளை பாதுகாக்கும் வகையில் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அரசியல் கட்சிகளோ, வகுப்புவாதமோ, மொழி அல்லது இன குழுக்களால் நடக்கும் ஊர்வலங்கள், போராட்டங்கள், பிற செயல்பாடுகளின்போது, பொது சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நிர்ணயிக்கும் நோக்கத்தை அடைய இந்த சட்டம் வரையறுக்கிறது.

நடவடிக்கை எடுக்கலாம்

இதே போல் இந்த சட்டம் தனியார் சொத்துகளுக்கும் பொருந்தும் வகையிலும், தனியார் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதத்தையும் குற்றமாக்குவதே சட்டமன்றத்தின் நோக்கம் என்பது தெளிவாகிறது. தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவதே சட்டம் இயற்றுபவர்களின் நோக்கம். இந்த சட்டத்தின் கீழ் உள்ள பதிவாகும் வழக்குகளை குறிப்பிட்ட கோர்ட்டு மட்டுமே விசாரிக்க வேண்டுமா? என்ற கேள்வி அந்தந்த கோர்ட்டு நீதிபதிகளிடம் எழுப்பப்படுகிறது.

மேலும் இந்த திருத்தச்சட்டத்தின் நோக்கம், சிலருக்கு இடையே ஏற்படும் பிரச்சினையில் தனியாருக்கு சொந்தமான சொத்துகள், உடமைகள் பாதிக்கப்பட்டால் மேற்கண்ட சட்டத்தின்கீழ் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்