செல்போன் வாங்கி கொடுக்காததால் மாணவி தற்கொலை

இரணியல் அருகே செல்போன் வாங்கி கொடுக்காததால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2023-08-19 18:45 GMT

திங்கள்சந்தை:

இரணியல் அருகே செல்போன் வாங்கி கொடுக்காததால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மாணவி

குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள நுள்ளிவிளை பகுதியை சேர்ந்தவர் அசோக். இவருடைய மனைவி சத்திய பிரியா. இவர்களுக்கு அபிஷேக் என்ற மகனும், அஸ்மதி (வயது 17) என்ற மகளும் இருந்தனர். நெய்யூரில் உள்ள ஒரு பள்ளியில் அஸ்மதி பிளஸ்-2 முடித்து விட்டு நர்சிங் படிப்புக்கு விண்ணப்பித்திருந்தார்.

இந்தநிலையில் அஸ்மிதா தன்னுடைய பெற்றோரிடம் செல்போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு தற்போது வாங்கி கொடுக்க முடியாது என பெற்றோர் கூறியதாக தெரிகிறது.

தற்கொலை

இதனால் மனமுடைந்த அஸ்மிதா சம்பவத்தன்று வீட்டில் செடிகளுக்கு அடிக்க வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும் இதுகுறித்து சத்தியபிரியா இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

செல்போன் வாங்கி கொடுக்காததால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்