சாலையில் உலா வந்த கரடிகள்

கோத்தகிரி அருகே சாலையில் கரடிகள் உலா வந்தன.

Update: 2022-12-01 19:00 GMT

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் கடந்த சில மாதங்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் கரடிகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் அடிக்கடி முகாமிட்டு வருகின்றன. இவ்வாறு வரும் கரடிகள் மனிதர்களை தாக்கி காயப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி அருகே கெரடாவில் இருந்து குமரன் காலனிக்கு செல்லும் சாலையில் 3 கரடிகள் உலா வந்தன.

இதனை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். ஒருசிலர் தூரத்தில் நின்றபடி சாலையில் கரடிகள் உலா வந்ததை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது அந்த காட்சி வைரலாகி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், கெரடா-குமரன்காலனி சாலையில் அடிக்கடி கரடிகள் உலா வருகின்றன. இந்த கரடிகள் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்கள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்