பி.இ. நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பி.இ. நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-01 19:00 GMT

காரைக்குடி,

பி.இ. நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நேரடி 2-ம் ஆண்டு

காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழக கல்லூரி மற்றும் சுயநிதி, கல்லூரிகள் ஆகியவற்றின் பி.இ., பி.டெக். 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஆண்டுதோறும் நடைபெறும். இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி நிறைவு பெற்றது. தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர், உயர் கல்வித்துறை செயலாளர், தொழில்நுட்பக்கல்வி இயக்குனர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பி.இ., பி.டெக். நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கைக்கான இணைய விண்ணப்ப பதிவு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டு வருகிற 7-ந்தேதி வரை விண்ணப்பத்தை இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்துகொள்ளலாம்.

கலந்தாய்வு

பாலிடெக்னிக் படித்து முடித்த மாணவர்களும், பி.எஸ்சி. படிப்பில் கணிதத்தை விருப்ப பாடமாக எடுத்து படித்த மாணவர்களும் 2-ம் ஆண்டு நேரடி என்ஜினீயரிங் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். 60 ஆயிரம் இடங்களுக் கான விண்ணப்ப பதிவுகள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்ப படிவங்கள் சரிபார்ப்பு நிறைவு பெற்றபின் 31-ந் தேதியன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஆன்லைன் வாயிலாக நடைபெறும் விண்ணப்பம் சரிபார்ப்பிற்கு மாணவர்கள் நேரில் வர வேண்டியதில்லை.

தங்களது விண்ணப்ப விவரங்களின் நிலையை இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். ஆகஸ்டு மாதம் சிறப்பு கலந்தாய்வு மற்றும் பொது கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடைபெற உள்ளது. இணையதள வழி கலந்தாய்வில் மாணவர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்து கலந்துகொண்டு விரும்பும் கல்லூரியை தேர்வு செய்யலாம். இவ்வாறு கல்லூரி முதல்வர் பழனி, கலந்தாய்வுக்கான ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், இணை ஒருங்கிணைப்பாளர் உமாராணி ஆகியோர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்