மதுரையில் பி.பி.சி. ஆவணப்படம் வெளியிடுவதாக கூறிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது

மதுரையில் பி.பி.சி. ஆவணப்படம் வெளியிடுவதாக கூறிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-30 20:30 GMT


மதுரையில் பி.பி.சி. ஆவணப்படம் வெளியிடுவதாக கூறிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

பி.பி.சி.ஆவணப்படம்

பிரதமர் நரேந்திர மோடி, 2002-ல் குஜராத் மாநில முதல்- அமைச்சராக இருந்தபோது, கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தையொட்டி பெரும் கலவரம் நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் குறிவைத்து கொலை செய்யப்பட்டதாகவும், அந்த மாநில போலீசார் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்தநிலையில் குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படம் ஒன்றை பி.பி.சி. செய்தி நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. மத்திய அரசு அந்த ஆவணப்படத்துக்கு தடை விதித்தது. மேலும் சமூக வலைதளங்களிலும் அந்த ஆவணப்படத்தை நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்தநிலையில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை நேற்றுமுன்தினம் திரையிடுவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அறிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார், உரிய அனுமதியுடன் படத்தை வெளியிட வேண்டும் என்று கூறினர். இதனால் அன்றைய தினம் ஆவணப்படம் திரையிடப்படாமல் நேற்று வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதனால்,       அங்கு நேற்று காலையிலேயே அந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

10 பேர் கைது

இந்தநிலையில், நேற்று மாலையில் ஆவணப்படம் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் செய்தனர். அப்போது, ஆவணப்படத்தை வெளியிட போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், அனுமதி மறுத்த போலீசாரை கண்டித்தும், படத்தை பொதுமக்களுக்கு காண்பிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், ஜெய்ஹிந்த்புரம்- ஜீவா நகர் மெயின் ரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் செல்வா தலைமையில் அந்த அமைப்பை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்