9 லாரிகளில் பேட்டரிகள் திருட்டு

வாகன காப்பக சுவரை உடைத்து, 9 லாரிகளில் பேட்டரிகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-11-16 16:06 GMT

திண்டுக்கல் என்.ஜி.ஒ. காலனி அருகே தனியார் வாகன காப்பகம் உள்ளது. நேற்று முன்தினம் இங்கு 12 லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அதில் 9 லாரிகளில் பேட்டரி வயர்களை மர்ம நபர்கள் அறுத்துள்ளனர். பின்னர் பெட்டிகளை உடைத்து அதில் இருந்த 18 பேட்டரிகளை திருடி சென்றனர். நேற்று காலை டிரைவர்கள் லாரிகளை வந்த பார்த்தபோது பேட்டரிகள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து வாகன காப்பக உரிமையாளர் கமாலுதீன் திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வாகன காப்பகத்தின் காம்பவுண்டு சுவரின் ஒரு பகுதியை உடைத்து, 9 லாரிகளில் பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேட்டரிகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்