குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலை கல்லூரி பட்டமளிப்பு விழா

குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலை கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.

Update: 2022-06-10 18:14 GMT

குளித்தலை,

குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் (சட்டமன்ற பொன்விழா) 10 -வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் மேகலா கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், போட்டி மிகுந்த இந்த உலகில் முன்னேறிட மாணவ, மாணவிகள் தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் நமது கொள்கையில் இருந்து நாம் மாறக்கூடாது. நம்மை நாமே குறைவாக நினைக்க கூடாது என்றார். விழாவில் கல்லூரியில் படித்த சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இதில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் ராஜ்குமார் கல்லூரியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்