நெல்லையில் கூடைப்பந்து போட்டி

நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது.

Update: 2022-08-13 23:06 GMT

நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 8-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. மாணவர்களுக்கான போட்டியில் பாளையங்கோட்டை அப்துல் ரகுமான் மேல்நிலைப்பள்ளி அணியும், ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. இதில் பாளையங்கோட்டை பள்ளி அணி வெற்றி பெற்றது.

மாணவிகளுக்கான போட்டியில் பாளையங்கோட்டை இக்னேசியஸ் கான்வென்ட் அணியும், கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா பள்ளி அணியும் விளையாடின. இதில் இக்னேசியஸ் கான்வென்ட் பள்ளி அணி வெற்றி ெபற்றது. கல்லூரி மாணவர்களுக்கான போட்டியில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி அணியும், ம.தி.தா. இந்துகல்லூரி அணியும் விளையாடிது. இதில் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி அணி வெற்றி பெற்றது. இதேபோல் மாணவிகளுக்கான போட்டியில் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி அணியும், ராணி அண்ணா மகளிர் கல்லூரி அணியும் விளையாடின. இதில் சேவியர் கல்லூரி அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் இந்திய அணியின் முன்னாள் கூடைப்பந்து வீரர் பிரிட்டம்சிங், ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள். இதில் நெல்லை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் மோகன், செயலாளர் நெல்லையப்பன், பொருளாளர் செல்வகோபால், உடற்கல்வி ஆசிரியர் சங்கர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்