வாழைநாரில் கூடை பின்னுதல் முகாம்
பரப்பாடி அருகே வாழைநாரில் கூடை பின்னுதல் முகாம் நடந்தது.
இட்டமொழி:
பரப்பாடி அருகே உள்ள காத்தநடப்பு கிராமத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வாழைநாரில் கூடை பின்னுதல் முகாம் நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு பாப்பான்குளம் பஞ்சாயத்து தலைவர் எஸ்.ஆர்.முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி சின்னத்துரை முன்னிலை வகித்தார். நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.