அடிப்படை வசதி செய்து தர வேண்டும்

பெரியசெவலை காலனியில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனா்.

Update: 2022-11-05 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்:

திருவெண்ணெய்நல்லூர் தாலுகா பெரியசெவலை காலனியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் கடந்த 2020-21-ம் நிதியாண்டில் ரூ.5.25 லட்சம் மதிப்பில் மகளிர் கழிவறை கட்டிடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பிள்ளையார் கோவில் தெருவில் 25 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. தற்போது அந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக இருக்கிறது. அந்த சாலையை உடனடியாக சிமெண்டு சாலையாக அமைத்துத்தர வேண்டும். மேலும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் அதன் அருகில் விளையாடி வரும் சிறுவர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை விரைந்து சீரமைக்க வேண்டும். அதோடு எங்கள் பகுதி மக்களுக்கென்று இருக்கிற சுடுகாட்டை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்