அடிப்படை கணினி கற்றல் பயிற்சி

அடிப்படை கணினி கற்றல் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-05-17 19:30 GMT

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு அடிப்படை கணினி கற்றல் பயிற்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மைய நூலக நல்நூலகர் சுகன்யா வரவேற்றார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சக்திவேல் வாழ்த்துரை வழங்கினார். குழந்தைகளுக்கு அடிப்படை கணினி கற்றல் பயிற்சி அளிக்கப்பட்டது. இறுதியில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பெற்றோர்கள், குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்