கிராமங்களில் அத்தியாவசிய பணிகள் பாதிப்பு

கிராமங்களில் அத்தியாவசிய பணிகள் பாதிப்பு

Update: 2023-05-17 12:29 GMT

தளி

ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும். காலநிலை ஊதியம் வழங்கவேண்டும். மூன்று ஆண்டுக்கு ஒருமுறை வட்டாரத்திற்குள் பணி மாறுதல் வழங்கவேண்டும். கருவூலம் மூலம் ஊதியம் வழங்குவதுடன், ஒய்வூதியமும் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள் கடந்த 15-ந் தேதி முதல் சென்னை சைதாப் பேட்டையில் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் ஊராட்சி செயலாளர்கள் சென்னை சென்று விட்டனர். இதனால் உடுமலை பகுதியில் உள்ள மானுப்பட்டி, பெரியவாளவாடி, புங்கமுத்தூர், தும்பலப்பட்டி, கல்லாபுரம், குறிஞ்சேரி, போடிபபட்டி, தீபாலபட்டி, ஆர்.வேலூர், வடபூதனம், ரெட்டிபாளையம், ராவணாபுரம் சின்ன குமாரபாளையம் குருவப்ப நாயக்கனூர் உள்ளிட்ட 14 கிராமங்களில் குடிநீர், வரிவ சூல், தெருவிளக்கு பராமரிப்பு, பொது சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

----------

Tags:    

மேலும் செய்திகள்