திருவாரூர் மாவட்டத்தில் உரிமம் இன்றி இயங்கி வந்த 5 பார்களுக்கு 'சீல்'
திருவாரூர் மாவட்டத்தில் உரிமம் இன்றி இயங்கி வந்த 5 பார்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் உரிமம் இன்றி இயங்கி வந்த 5 பார்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
உரிமம் இல்லாத பார்கள்
திருச்சி முதுநிலை மண்டல டாஸ்மாக் மேலாளர் மாலதி உத்தரவின் பேரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் திருமாறன் (பெரம்பலூர்), தங்கதுரை (கடலூர்), ராஜா (தஞ்சை) ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் திருவாரூர் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் இயங்கும் டாஸ்மாக் பார்கள் மற்றும் உரிமை தொகை செலுத்தாத பார்கள் போன்றவை குறித்து ஆய்வு நடத்தினர்.
இதில் வலங்கைமான் தாலுகா ஆலங்குடி, தொழுவூர், நல்லூர், கோவிந்தகுடி மற்றும் திருவாரூர் நகர் ஆகிய இடங்களில் உரிமம் இல்லாமல் இயங்கி வந்த 5 பார்கள் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டத்தில் உரிமம் இன்றி இயங்கி வந்த 5 பார்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
மேலும் அரசுக்கு மாதாந்திர உரிமை தொகையினை செலுத்தாத எரவாஞ்சேரி, குன்னியூர் மற்றும் மன்னார்குடி பகுதியில் இயங்கி வந்த 3 பார்களும் பூட்டி 'சீல்' வைக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட பார் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சக்தி பிரேம் சந்தர் கூறுகையில், 'உரிமம் இல்லாமல் பார்களை நடத்த வேண்டாம். இதனை மீறி நடத்தப்படும் பார் உரிமையாளர்கள் போலீசார் மூலம் கைது செய்யப்படுவதுடன், கடையும் பூட்டி 'சீல்' வைக்கப்படும். மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர உரிமைத் தொகையினை பார் உரிமையாளர்கள் தவறாமல் செலுத்த வேண்டும்' என்றார்.