குன்னூரில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது

பலத்த மழையால் குன்னூரில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.

Update: 2022-10-16 18:45 GMT

குன்னூர், 

குன்னூரில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. சந்திரா காலனி குடியிருப்பில் நடைபாதைக்காக 40 அடி உயரத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. தொடர் மழையால் இந்த தடுப்புச்சுவர் நள்ளிரவில் பயங்கர சத்தத்துடன் இடிந்து, யூசுப் என்பவரது வீட்டின் மீது விழுந்தது. இதனால் அவரது வீட்டின் பின்பகுதியில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மின் ஊழியர்கள் நடைபாதை ஓரத்திலிருந்த மின்கம்பங்களை மாற்று இடத்தில் அமைத்து மின் இணைப்பு வழங்கினர். வீட்டின் சுவர் இடிந்து பாதிக்கப்பட்ட யூசுப்பிற்கு அரசு நிவாரண தொகையாக ரூ.4,100 வழங்கப்பட்டது. இதேபோல் கோத்தகிரி குமரன் காலனி பகுதியில் செவனம்மாள் என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சபீர்கான், கிராம உதவியாளர் அறிவாகரன் மற்றும் வருவாய்த்துறையினர், வீடு இடிந்து பாதிக்கப்பட்டவருக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகையான ரூ.4,100 வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்