பல்லடத்தில், 2 வீதிகளுக்கு இடையே இருந்த தடுப்புச்சுவர் அகற்றப்பட்டது
பல்லடத்தில், 2 வீதிகளுக்கு இடையே இருந்த தடுப்புச்சுவர் அகற்றப்பட்டது
பல்லடம்
பல்லடத்தில், 2 வீதிகளுக்கு இடையே இருந்த ஆக்கிரமிப்பு தடுப்புச்சுவர் அகற்றப்பட்டது. பல்லடம் நகராட்சி 10வது வார்டு மாணிக்காபுரம் பகுதியில் உள்ள இரண்டு லே-அவுட் குடியிருப்புகளுக்கு மத்தியில், தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் இந்தப் பகுதியில் உள்ளவர்கள் மற்றொரு பகுதிக்கு செல்ல சுற்றிவர வேண்டிய நிலை இருந்து வந்தது இதுகுறித்து அங்குள்ள பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்து இருந்தனர். இந்த நிலையில் நகராட்சித் தலைவர் கவிதாமணி ராஜேந்திர குமார், ஆணையாளர் விநாயகம் நேற்று அங்குள்ள குடியிருப்புவாசிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தடுப்பு சுவரை இடித்து விட்டு அங்கு வழி ஏற்படுத்திக் கொள்ள சம்மதம் பெற்றனர். இதையடுத்து அந்த தடுப்புச் சுவர் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.