பர்கூர், அத்தாணி உள்ளிட்ட4 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ வசதிசட்டசபையில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கோரிக்கை

பர்கூர், அத்தாணி உள்ளிட்ட 4 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று சட்டசபையில் ஏ.ஜி..வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தாா்

Update: 2023-04-21 20:59 GMT

சட்டசபையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதி ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி 2016-ம் ஆண்டு தாலுகா மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு இன்று வரை தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. இதனால் அத்தாணி, சின்னதம்பிபாளையம், எண்ணமங்கலம், பர்கூர் ஆகிய 4 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பர்கூர் மலைப்பகுதியில் இருந்து வரும் அவசர நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட அனைவரும் பயன்படும் வகையில் ஸ்கேன் வசதி, அவசர சிகிச்சை பிரிவு, தேவையான மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பர்கூர் மலை கிராம ஊராட்சியில் 30 கிராமங்களுக்கும் திறந்தவெளி கிணறு அமைத்து மேல்நிலைத் தொட்டி கட்டி குடிநீர் விஸ்தரிப்பு செய்து கொடுக்க வேண்டும். அந்தியூர், அத்தாணி, அந்தியூர் வழியாக அம்மாபேட்டை வரை 4 வழி சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும். பர்கூர் மலை கிராம விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மும்முறை மின்சாரம் மற்றும் பட்டா வழங்க வேண்டும்.

டி.என்.பாளையம் ஊராட்சி கள்ளிப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டிடங்கள் கட்டி 30 படுக்கைகளுடன் விரிவுப்படுத்தி மருத்துவ குடியிருப்பு மற்றும் விஷ முறிவுடன் சேர்த்து புதிய மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்திட வேண்டும். விவசாயம் பயன்பெறும் வகையில் தோனி மடுவு பள்ளத்தாக்கில் இருந்து வரும் காட்டாற்று நீர் மற்றும் காவிரி உபரி நீரை இணைத்து அந்தியூர் மற்றும் பவானி தொகுதியில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்பி மானாவாரி பாசன வசதி செய்திட திட்டம் நிறைவேற்ற வேண்டும்

வாணிப்புத்தூர் மற்றும் அத்தாணி பேரூராட்சி பகுதியில் மின் மயானம் அமைத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் எம்.எல்.ஏ. பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்