வீடு புகுந்து கத்தி முனையில் மிரட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம்

வீடு புகுந்து கத்தி முனையில் மிரட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தப்பி ஓடியவரை 4 மணி நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்.

Update: 2022-08-20 17:07 GMT

தொண்டி,

வீடு புகுந்து கத்தி முனையில் மிரட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தப்பி ஓடியவரை 4 மணி நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்.

பாலியல் பலாத்காரம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பாசிப்பட்டினத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 39).

இவர் நள்ளிரவில் ஒரு வீட்டில், இளம்பெண் தனியாக இருப்பதை அறிந்து, அந்த வீட்டிற்குள் புகுந்துள்ளார்.

அந்த இளம்பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்து தப்பி ஓடி விட்டாராம். இதுபற்றி அந்த இளம்பெண் தனது குடும்பத்தினரிடம் கூறி அழுதுள்ளார்.

4 மணி நேரத்தில் சிக்கினார்

அதனைத் தொடர்ந்து எஸ்.பி.பட்டினம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், எஸ்.பி.பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் காளீஸ்வரன் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில், பதுங்கி இருந்த ஆசைத்தம்பியை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சம்பவம் தொடர்பாக புகார் அளித்த 4 மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவரை கைது செய்த போலீசாரை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை பாராட்டினார்.

கைதான ஆசைதம்பி ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவர். 2 மனைவிகளும் அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்