ஒகேனக்கல்லில் மதுபான பார்களை மூட கலெக்டர் உத்தரவு

Update: 2023-05-02 18:45 GMT

தர்மபுரி:

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கர்நாடக மாநில எல்லையில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உள்ள மதுபான கடைகள், மதுபான பார்களை 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சுற்றுலா தலமான ஒகேனக்கல்லில் உள்ள தனியார் ஓட்டல் மற்றும் தமிழ்நாடு ஓட்டல் ஆகியவற்றில் உரிமை பெற்று செயல்படும் பார்களை 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 3 நாட்கள் மூடிவைக்க தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த உத்தரவை மீறி செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் செய்திகள்