தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-14 18:45 GMT

தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினவேல்பாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி போல்பேட்டை 6-வது தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 56) என்பவர் அதே பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டு இருந்தாராம். உடனடியாக போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் இருந்த 240 வெளிமாநில லாட்டரி சீட்டுகள், ரூ.7 ஆயிரத்து 80 ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்