தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டாா்.
கடத்தூர்
கோபி அருகே உள்ள மொடச்சூர் பகுதியில் கோபி போலீசார் ரோந்து ெசன்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டனர். இதைத்தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக கோபாலகிருஷ்ணன் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 10 பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.