கனகநாச்சியம்மன் கோவிலுக்கு செல்ல தடை

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கனகநாச்சியம்மன் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-29 17:01 GMT

வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லை பகுதியில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆந்திர அரசு கங்குந்தி ஊராட்சி பெரும்பள்ளம் பகுதியில் 15 அடி உயரத்தில் கட்டி உள்ள தடுப்பணையை தாண்டி தமிழக பாலாற்றில் வினாடிக்கு 580 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தடுப்பணையை கடந்துதான் கனகநாச்சியம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும். பாலாற்றில் நீர்வரத்து இன்னும் அதிகரிக்கும் என்பதால் தடுப்பணையில் குளிக்கவோ, கனகநாச்சியம்மன் கோவிலுக்கு செல்லவோ கூடாது என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பாலாற்றில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்