வங்கிகள் எளிய முறையில் விரைவாக கடன் வழங்க வேண்டும்

வங்கிகள் எளிய முறையில், விரைவாக கடன் வழங்க வேண்டும் என்று வங்கியாளர்கள் ஆய்வுகூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் தென்காசி ஜவஹர் வலியுறுத்தினார்.

Update: 2022-12-22 18:05 GMT

வங்கிகள் எளிய முறையில், விரைவாக கடன் வழங்க வேண்டும் என்று வங்கியாளர்கள் ஆய்வுகூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் தென்காசி ஜவஹர் வலியுறுத்தினார்.

ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கிகள் ஆய்வுக்குழு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு கூடுதல் தலைமைச் செயலாளருமான தென்காசி எஸ்.ஜவஹர் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் அமர்குஷ்வாஹா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜவகர் பேசியதாவது:-

எளிய முறையில்

பொதுமக்களுக்கு கடன் உதவிகளை காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு விவசாய கடன், தாட்கோ கடன், கல்விக்கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு மானியக்கடன், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவிகள், மாவட்ட தொழில் மைய மானிய கடன்கள், தெருவோர வியாபாரிகளுக்கான கடனுதவிகள் ஆகிய கடனுதவிகளை எளிய முறையில் விரைவாக வழங்க வேண்டும்.

குறிப்பாக கல்விக்கடன் தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. தாமதமின்றி கல்விக்கடன்கள் வழங்க வேண்டும். தாட்கோ உள்ளிட்ட துறைகள் பரிந்துரைத்து வங்கிகளில் கடனுதவி வழங்குவதற்காக நிலுவையில் உள்ள 75 இனங்களில் கடன் கோரியவரை வங்கியிலிருந்து தொலைபேசி மூலமோ கடிதம் மூலமோ தொடர்பு கொண்டு உரிய விவரங்கள் பெற்று கடன் உதவி வழங்கிட வங்கி மேலாளர்கள் முனைப்புடன் ஈடுபட வேண்டும்.

சேவை நோக்கில்...

ஏழை, எளிய மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் எளிய முறையில் அணுகி பயன்பெறும் வகையில் வங்கிகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்கிலும், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் செம்மையான முறையில் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையிலும், ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தேவையற்ற கால தாமதங்களைத் தவிர்க்க வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் மைக்ரோ உணவு பதப்படுத்தும் திட்டத்திள் கீழ் 125 நபர்களுக்கு ரூ.2 கோடியே 67 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 88 சதவீதம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

சைபர் குற்றம் அதிகரிப்பு

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேசுகையில் தறபோது சைபர் குற்றங்கள் அதிகமாக நடக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. இதில் 402 புகார்களுக்கு சி.எஸ்.ஆர். வழங்கப்பட்டுள்ளது. 22 வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சைபர் கிரைம் நடைபெறுவதை தடுக்க வங்கி வளாகத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டிஸ்பிளே செய்ய வேண்டும். வங்கிக்கு வெளியே சாலையை பார்த்து 2 கேமராக்கள் அமைக்க வேண்டும். இது குற்ற சம்பங்கஙை தடுக்க உதவியாக இருக்கும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பிரசனகுமார், ரிசர்வ் உதவி பொது மேலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன் மற்றும் அனைத்து வங்கியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்