குமரமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் உண்டியல் உடைப்பு

குமரமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் உண்டியலை மர்ம ஆசாமிகள் உடைத்தனர்.

Update: 2022-10-11 19:15 GMT

அன்னவாசல் அருகே உள்ள குமரமலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது. பின்னர் கோவில் குருக்கள் மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறந்து கோவிலுக்கு சென்றனர். அப்போது அங்குள்ள உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் ஒயர்கள் துண்டிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் போலீஸ் மோப்பநாய் மோப்பம் பிடிக்காமல் இருக்க மர்ம ஆசாமிகள் மிளகாய் பொடியை தூவி சென்றனர். இந்த சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்