அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.

Update: 2023-09-27 19:26 GMT

மேல்மலையனூர், 

மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியல்கள் அவ்வபோது திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம், விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், ஆய்வாளர் சங்கீதா, அறங்காவலர்க்குழு தலைவர் செந்தில்குமார் பூசாரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் 94 லட்சத்து 42 ஆயிரத்து 622 ரூபாயும், 315 கிராம் தங்க நகைகளும், 1,110 கிராம் வெள்ளிப் பொருட்களும் வசூலாகியது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள், இந்தியன் வங்கி ஊழியர்கள், ஆகியோர் உடனிருந்தனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்