திருவெண்ணெய்நல்லூர் அருகே மதுரை வீரன் கோவில் உண்டியல் உடைப்பு

திருவெண்ணெய்நல்லூர் அருகே மதுரை வீரன் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடுபோனது.

Update: 2023-06-21 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்தில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 4-ந் தேதி நடந்தது. சம்பவத்தன்று நள்ளிரவில் மர்மநபர்கள், கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்