சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் வங்கி கடன் வழங்க வேண்டும்

சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் வங்கி கடன் வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-10-07 18:45 GMT

சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் வங்கி கடன் வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரவை கூட்டம்

திருவாரூரில் ஏ.ஐ.டி.யூ.சி. சாலையோர வியாபார தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத், மாவட்ட தலைவர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் கட்சியின் ஒன்றிய செயலாளர் நாகராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் புலிகேசி, நகர செயலாளர் தர்மதாஸ், நகர செயற்குழு உறுப்பினர் செல்லமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அடையாள அட்டை

போலியான சாலையோர வியாபாரிகள் பெயரில் அடையாள அட்டை வழங்குவதை கைவிட்டு, உண்மையான வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்.வணிகக்குழு கூட்டத்தை உடன் நகராட்சி நிர்வாகம் நடத்திட வேண்டும். அனைவருக்கும் வங்கி கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்