கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு: சீரமைக்கும் பணி தீவிரம்

கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு ஏற்பட்டதால் அதை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-08-25 21:51 GMT

ஈரோடு அருகே வாவிக்கடை பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் (58-வது மைல்) கரை உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

தொழிலாளர்கள் உதவியுடன் மண் மூட்டைகள் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் அடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் உடைப்பை சரிசெய்ய முடியாமல் திண்டாடி வருவதாகவும், 2 நாட்களாக இந்த பணி முடியாமல் இருப்பதாகவும் விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்