பெங்களூர் - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பெங்களூர் - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. பெங்களூர் - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்.
*பெங்களூர் - சென்னை எழும்பூர் இடையே (வண்டி எண் : 60519) இன்று மற்றும் நாளை காலை 6.50 மணிக்கு பெங்களூருவில் இருந்து இயக்கப்படுகிறது.
*சென்னை எழும்பூர் - பெங்களூர் இடையே (06520) இன்று மற்றும் நாளை மாலை 3.50 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.